தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய விவரங்கைளை பொருத்தும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திர ஆயத்தப்பணிகள் தீவிரம் - வேட்பாளர்கள்
தமிழ்நாடு: தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் கடலூர், தருமபுரி மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் விவரங்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுரி, கடலூர் மாவட்டங்களில் வேட்பாளர்களின் விவரங்களை பொருத்தும் பணிகள் பாதுகாப்பான முறையில் தொடங்கியது. தருமபுரியில் நடைபெற்ற இப்பணியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார். இந்தப் பணி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 2,623 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.
அதேபோன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் விவரங்களை சேர்க்கும் பணி தொடங்கியது. இதனை சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் துவக்கிவைத்தார்.