வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் பிற்பகலில் வாக்குப்பதிவின்போது பாமக-திமுக தொண்டர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
திமுக-பாமக தொண்டர்கள் மோதல்: மூன்று பேர் காயம் - திமுக-பாமக தொண்டர்கள்
வேலூர்: குடியாத்தம் பகுதியில் பாமக - திமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர்.
மூன்று பேர் காயம்
இதில் இருக்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.