சென்னை புதுப்பேட்டை திருவேங்கட தெருவைச் சேர்ந்தவர் செசிலி மோரால் (74). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் கடந்த 56 ஆண்டுகளாக புதுப்பேட்டையில் வசித்து வந்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை கேட்டு உயிரைவிட்ட மூதாட்டி...! - பெயர் இல்லாததால் மூதாட்டி பலி
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி மாரடைப்பால் பலியான சம்பவம் புதுப்பேட்டையில் நடந்துள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அவர், அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த வாக்காளர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பியபோது, எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.