அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரின் சின்னமான பானையை ஒரு பிரிவினர் உடைத்துள்ளனர். இதைப்பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் பானையை உடைத்தவர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.
வாக்குப்பதிவின்போது இருதரப்பினரிடையே மோதல்- 20 வீடுகள் சேதம் - 20வீடுகள் சேதம்
அரியலூர்: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது அரியலூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
20வீடுகள் சேதம்
அப்போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் வசிக்கும் தெருவில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.