தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை இன்று ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி கிழக்கு தொகுதி ஆகிய இடங்களில் பரப்புரையில்ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, "ஒட்டபிடாரம் பகுதியில் உள்ள மீனவ மக்களைசந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். அப்போது அந்த பகுதியில் உள்ள மக்கள்பிரதமர் மோடி கொண்டு வந்ததிட்டத்தின் மூலம் அதிக பலன் கிடைத்தாக தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டாயம் வேலைவாய்ப்பை உருவாக்குவேன்- தமிழிசை உறுதி - பாஜக வேட்பாளர்
தூத்துக்குடி: வீட்டில் உள்ள ஒருவரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டாயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில்மீன்பிடிப்பதற்கு ஏதுவாக மீன்களை பதப்படுத்தும் வகையில் கடலுக்குள்ளும், கரையிலும் பதப்படுத்தும் மையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டில் உள்ள ஒருவரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கட்டாயம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். கனிமொழி தனக்கு கிடைத்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். தூத்துக்குடியில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமான சம்பவம். ஆனால், அதை திமுக வேட்பாளர் துருப்பு சீட்டு போல் பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்"இவ்வாறு அவர் கூறினார்.