மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தன்னை ஆதரித்து பரப்புரை செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருகின்ற 11 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளார்.
தமிழிசைக்காக களமிறங்கும் சுஷ்மா சுவராஜ் - for
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் பரப்புரை செய்ய உள்ளார்.
தூத்துக்குடி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவேதான் இந்த தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும், ஒரு நல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருப்பார் என்பதைதான் தேர்தலுக்கு பின் நிரூபித்துக் காட்டுவேன் எனவும் கூறினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல எனக் கூறிய அவர், இந்து மதத்தை திமுகவினர் தொடர்ந்து நிந்தித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மோடி அறிவித்த பாஜக தேர்தல் அறிக்கையால் 1 கோடி ஏழை குடும்பங்களின் அடிப்படை கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் உயரும் என்றும் தெரிவித்தார்