சென்னை அடுத்த கொரட்டூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின்தான் முதலமைச்சர்- வேல்முருகன் ஆரூடம் - amilnadu
சென்னை : சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் வரப்போகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சூளுரைத்துள்ளார்.
வேல்முருகன் சூளுரை
பாசிச பாஜக ஆட்சி மற்றும் அடிமை ஆட்சியை அகற்றுவதற்கு திமுக கூட்டணியை விட்டால் வேறு யாரும் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விவாதம் செய்ய அழைக்கும் அன்புமணியிடம், நான் தயாராக உள்ளேன்.
ஒரே மேடையில் நாம் இருவரும் விவாதம் செய்யலாமா என கேள்வி எழுப்பினார். மேலும் ஏப்ரல் 18ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வரப் போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.