தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் - சஞ்சய் தத் - campaign

தேனி: தேனி மக்களவைத் தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.

தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் - சஞ்சய் தத் வலியுறுத்தல்

By

Published : Apr 9, 2019, 6:23 PM IST

தேனி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேனி அருகே உள்ள அன்னஞ்சி விலக்கு பகுதியில் ராகுல் காந்தி பரப்புரை செய்வதற்கான இடத்தை பார்வையிட்ட சஞ்சய் தத், ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்த பிறகும் அவரது சொந்த மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் செய்து தரப்படவில்லை எனவும், இன்றளவும் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த பகுதியாகவே தேனி உள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.

தேனியை இந்தியாவின் முதல் மாவட்டமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மாற்றிக்காட்டுவார் என நம்பிக்கை தெரிவித்த சஞ்சய் தத், தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

பரப்புரை வாகனங்களுக்கான தேர்தல் ஆணைய அனுமதி சீட்டினை கலர் ஜெராக்ஸ் எடுத்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான வாகனங்களில் பணம் கொண்டு செல்வதால் தேனி மக்களவைத் தொகுதிக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தேனிக்கு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் - சஞ்சய் தத் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details