புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குள்பட்ட பகுதியான பாலாஜி நகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், ”புதுவை காமராஜ் நகர் தேர்தல் பணிக்காக காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சியினர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறோம். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது; தொகுதி மக்கள் அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை...! - நமச்சிவாயம் தகவல் - puducherry state leader namasivayam
புதுச்சேரி : திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள வரும் 17ஆம் தேதி புதுச்சேரி வருகிறார் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
puducherry
வரும் 17ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளார் என்ற தகவலையும் நமச்சிவாயம் சொன்னார்.