திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ஜோதிமுத்துவை ஆதரித்து தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமானது மாம்பழம். இந்த மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் நமது வேட்பாளரை வாக்காளர்களாகிய நீங்கள் வெற்றியடைய செய்ய வேண்டும்.
திமுக தலைவர் ஒரு புகார் பெட்டி - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்! - திண்டுக்கல் பரப்புரை
திண்டுக்கல்: திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருவதால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
மேலும், அதிமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார். திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குறைகளை மட்டுமே பேசி வருவதால் அவர் புகார் பெட்டியாக மாறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.