தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

முதலமைச்சர் வருகை - அவசர அவசரமாக சீரமைக்கப்படும் சாலைகள்! - Pollachi

கோவை: பொள்ளாச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு செல்வதையொட்டி, அவர் வந்து செல்லும் சாலைகள் மட்டும் அவசர அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

சீரமைக்கப்படும் சாலைகள்

By

Published : Apr 6, 2019, 5:29 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் அங்குள்ள உள்ள முக்கிய வீதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதனைக் கண்டித்து பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கெள்ள பொள்ளாச்சி வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் சாலைகள் மட்டும் அவசர அவசரமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதுப்பொலிவு பெறும் பொள்ளாச்சி சாலைகள்

ABOUT THE AUTHOR

...view details