தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தேர்தல் விழிப்புணர்வு: பொள்ளாச்சியில் மினி மாரத்தான்! - மக்களவை தேர்தல்

கோவை: நூறு விழுகாடு வாக்குப் பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் மினி மாரத்தான்

By

Published : Apr 15, 2019, 9:45 AM IST

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டம் சார்பில் மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொள்ளாச்சி ரவுண்டானா பகுதியில் இருந்து மினி மாரத்தான் போட்டியை உதவி தேர்தல் அதிகாரியும் கோட்டாட்சியருமான ரவிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மகாலிங்கபுரம் சாலை வழியாக சென்று நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவுற்றஇந்த போட்டியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் நூறு விழுக்காடு வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்த பனியனை அணிந்து ஓடினர்.

ஓட்டம் நிறைவுற்ற இடத்தில் ஆட்சியர் கூறியதாவது, ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நாள் அன்று, 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் வாக்களிக்க வலியுறுத்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொள்ளாச்சியில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தேர்தல் விழிப்புணர்வு: பொள்ளாச்சியில் மினி மாரத்தான்!

ABOUT THE AUTHOR

...view details