தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

வெற்றி தலித்துகளுக்கு சுலபம் இல்லை - பா. ரஞ்சித் - தொல். திருமாவளவன்

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தொல். திருமாவளவனுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

File pic

By

Published : May 24, 2019, 3:04 PM IST

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (மே 23) நடைபெற்றது. இதில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியோடு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இவரது வெற்றி தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!!

மகிழ்ச்சி !! இந்த வார்த்தையில் அண்ணன் திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால்
எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! ஜெய் பீம்!!' என்று ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details