வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,
அதிமுக ஆட்சியை ஜெயலலிதா கவனித்து வருகிறார் - ஒபிஎஸ் - ஒ பிஎஸ்
சென்னை: நான் இல்லாத நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துக்கிறார்களா என அம்மா கண்காணித்து வருவதாக ஒ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
வடசென்னை தொகுதியில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சிறந்த எம்.பியாக இருப்பார். சேது சமுத்திர திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ. 40 ஆயிரம் கோடியை திமுகவினர் கடலில் போட்டார்களா அல்லது யார் வீட்டிலும் போட்டார்களா என்று இதுவரை தெரியவில்லை.
மேலும் சுனாமி, புயல், பூகம்பம் என எது வந்தாலும் அதிமுக அரசை எதுவும் செய்ய முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஜோசியர் சொன்னார் என்று பல கலர் சட்டை போட்டார், அவருக்கு எதுவுமே எடுபடவில்லை. நான் இல்லாத நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துக்கிறார்களா என அம்மா கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.