நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று அமர்சேவா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜனநாயகத்தின் வெற்றி அனைத்து தரப்பினரும் வாக்களிப்பதில் உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாற்றுத் திறனாளிகளும் மற்றவர்களைப் போல சமமாக தேர்தலில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி - மக்களவை தேர்தல்
நெல்லை: மக்களவைத்தேர்தலை முன்னிட்டு தென்காசியில் அமர்சேவா சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வரிசையில் நிற்காமல் முதலில் சென்று வாக்களிக்க முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி வசதி உள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பிரெய்லி வசதி உள்ளது.
இதுபோல் பல்வேறு வசதிகள் தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. இதில் தாசில்தார் செல்வவிநாயகம் மற்றும் அமர்சேவா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.