கருணாநிதி - ஜெயலலிதா என்கிற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் களமாக இத்தேர்தல் உள்ளது. இதில் அதிமுக - திமுக ஒருபுறம் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அமமுக மறுபுறம் போட்டி போட்டுக்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
சுகாதாரம் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பேன்: திண்டுக்கல் மநீம வேட்பாளர் உறுதி!
திண்டுக்கல்: மருத்துவர் என்ற முறையில் சுகாதாரம் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பேன் என திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் சுதாகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நேரடியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது அரசியல் பிரவேசம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், இந்த தேர்தலில் இவரும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏனெனில், தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரையில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதளவு பிணைந்துள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் டாக்டர் சுதாகரன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில், “என்னுடைய முதன்மையான திட்டங்கள் சுகாதாரம் சார்ந்தது. ஏனெனில், மருத்துவர் என்ற முறையில் நான் சுகாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவேன். மேலும், பல ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி திண்டுக்கல் மாநகரில் அமைக்கப்படும். அதேபோல, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய தரமான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.