தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், துணை ராணுவப்படையினர், சிறப்புக் காவல் படையினர் என 1,250 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
பெரம்பலூரில் தேர்தல் பணிக்கு 1,250 காவலர்கள், துணை ராணுவப்படையினர்...! - 1250 பெரம்பலூர் காவலர்கள் ராணுவம்
பெரம்பலூர்: மக்களவைத் தேர்தலுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 1,250 காவலர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
காவலர்கள்-துணை ராணுவம் அணிவகுப்பு
அதனையொட்டி இன்று ராணுவக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரைப் பகுதியில், கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் இந்தக் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.