திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க அதிமுக கட்சி சார்பாக மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மதுரை வடக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார்.
தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரே கட்சி அதிமுகதான் - ராஜன் செல்லப்பா பெருமிதம் - தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரே கட்சி அஇஅதிமுகதான்
மதுரை: அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் கட்சி அதிமுக என ராஜன் செல்லப்பா பேசியுள்ளது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அவர் கூறுகையில், " அடிமட்ட தொண்டனுக்கு வாய்ப்பு வழங்கும் ஒரே கட்சி அதிமுகதான். கழகத்தில் நிலையான இடம்பெற்ற வேட்பாளர் முனியாண்டிக்கு அறிமுகமே தேவை இல்லை. இவர் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றவர். இவரின் சிறப்பை தலைமை அறிந்ததால்தான் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இவருக்கு வாய்ப்பளித்தூர்கள். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் கட்சியில் பாடுபடும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்ப்புகள் தரப்படும். அதிமுகவின் கோட்டையாக திருப்பரங்குன்ற தொகுதி என்றுமே திகழ வேண்டும்" என்றார்.
TAGGED:
ராஜன்செல்லப்பா