தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

’மக்கள் தேர்தல் அறிக்கை’:  தயார் செய்து வெளியிட்ட சமூக அமைப்புகள்! - உள்ளாட்சி தேர்தல்

சென்னை: பல்வேறு சமூக அமைப்புகளைச் சேந்தவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய, மக்கள் கோரிக்கைகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.

மக்களின் தேர்தல் அறிக்கை
people election manifesto

By

Published : Dec 8, 2019, 5:39 PM IST

தன்னாட்சி, நமது தோழமை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து தயாரித்த உள்ளாட்சிக்கான மக்கள் தேர்தல் அறிக்கையை செய்தியாளார்கள் முன்னிலையில் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று வெளியிட்டனர்.

இதில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், அறப்போர் இயக்கம், இளைய தலைமுறை, தோழன், மக்களின் குரல் போன்ற பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டு மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இத்தேர்தல் அறிக்கையில் கொண்டுள்ள முக்கிய குறிப்புகள் கீழ்வருமாறு:

1. கிராமசபை வலுப்படுத்தப்பட வேண்டும்

2. உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்

3. இடஒதுக்கீட்டில் வரும் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல்

4. எல்.சி. ஜெயின் குழுவின் பரிந்துரைப்படி அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துதல்

5. நகர உள்ளாட்சிகளுக்குத் தனிச்சட்டம், நகர சபையை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்

6. தமிழ்நாட்டில், பஞ்சாயத்துக்கு என்று தனி அமைச்சகம்

7. அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ‘ஆம்பட்ஸ்மேன் அமைப்பு’ (Ombudsman system)

போன்ற முக்கிய கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்கள்தோறும் ஊராட்சி நிர்வாகம், கிராமசபை தொடர்பாகப் பயணித்த அனுபவத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கையை, அம்மக்களின் சார்பாக அனைத்து பிரதான கட்சிகளுக்கும் அனுப்பவுள்ளோம் என்றும், மேலும் உள்ளூர் அளவில் வேலை செய்யும் இளைஞர்களிடமும் இதைக் கொண்டு சேர்க்கவுள்ளோம் என்றும் அமைப்பிலுள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details