தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி கம்பத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதலில் ஈடுபட்டதாக கூறும் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பை பற்றி எங்களிடம் விளக்க தேவையில்லை. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதற்கான ஆதாரத்தை எந்த ஒரு ஊடகமும் இதுவரை வெளியிடவில்லை. தேர்தலுக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் ஆட்சேபனை இல்லை- கேஎஸ் அழகிரி - Rajiv convicts
தேனி: ராஜீவ் கொலை குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், அவர்கள் குற்றவாளி என்பதாலே நீதிமன்றம் விடுவிக்க மறுக்கின்றது என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி வியாபாரிகளுக்கு நல்ல திட்டம்தான். ஆனால் அதை முறையாக கட்டமைப்பு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்தி வியாபாரிகளுக்கு நல்லதை செய்வோம். நியூட்ரினோ திட்டம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்றாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அத்திட்டத்தை செயல்படுத்த மட்டோம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நாங்கள் போராடவில்லை. நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் குற்றவாளி என்பதாலே நீதிமன்றம் அவர்களை விடுவிக்க மறுக்கின்றது. மேலும் தமிழர்கள் என்பதற்காக அனைத்து கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியுமா? அப்படி என்றால் நாட்டில் சிறைச்சாலைகளே இருக்கக்கூடாது. மேலும் இந்த எழுவர் விடுதலையை போன்று வேறு எந்த கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என யாரும் வற்புறுத்துவதில்லை. ஏனெனில் இதற்கு பின்னால் ஒரு சில அமைப்புகள் இருந்து கொண்டு ஆதரவளிக்கின்றனர்" இவ்வாறு அவர் கூறினார்.