கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் எபினேசர் என்பவர் போட்டியிடுகிறார். இவர் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், சென்னையில் வசித்து வருகிறார்,
எபினேசருக்கு, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது, அம்மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு கூட மொத்தம் ஐந்து பேருடன் வந்து மனு அளித்து விட்டு சென்ற வேட்பாளர் எபினேசர், பின்னர் தொகுதி பக்கமே வரவில்லை என்று அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
தேசிய, மாநில கட்சியின் முக்கிய தலைவர்கள் குமரியை நோக்கி படையெடுத்து, இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர் தற்போது எங்கே இருக்கிறார், குமரியில் எங்கு பரப்புரை செய்கிறார் என்ற தகவல் பொதுமக்களுக்கு மட்டுமில்ல, பத்திரகையாளர்களுக்கு கூட தெரியவில்லை.
ஓட்டு பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடாத வேட்பாளரால், மக்கள் நீதி மய்ய கட்சியின் அம்மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியை புறக்கணித்துள்ளனர்.