மதுரை ஆலங்குளம் பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அங்கு பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், ரூ.12,000-ஆக இருந்த தாய்மார்களுக்கான நிதி உதவித்தொகையை ரூ.18,000-ஆக நாங்கள் உயர்த்தியுள்ளோம் என்றும், சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘திமுக மீண்டும் வெற்றிபெற முடியாத சூழலை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்’ - ஓபிஎஸ் - திமுக
மதுரை: திமுக எந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற முடியாத சூழலை ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ops
மேலும், 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் உறுதியான தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், தேர்தல் முடிந்ததும் 60 லட்சம் ஏழை மக்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்த ஓ.பி.எஸ், லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் படுகொலை என வன்முறை கலாசாரம் கொண்ட திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையை ஜெயலலிதா உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
Last Updated : May 9, 2019, 11:52 AM IST