திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்த திமுக மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
திருவள்ளூர் திமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை - ls election
திருவள்ளூர்: மணவாள நகரில் திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
இதையடுத்து திராவிட பக்தன் வீட்டில் திடீரென வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணம் ஏதும் சிக்காததால் வருமான வரித்துறையினர் திரும்பி சென்றனர்.