தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும்- காதர்முகைதீன் - kadhar mogaithen

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் என இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித்தலைவர் காதர்முகைதீன் தெரிவித்துள்ளார்.

காதர்முகைதீன்

By

Published : Apr 5, 2019, 10:55 PM IST

நெல்லை மாவட்டம், தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும். மக்கள் அனைவரும் மோடி மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளனர் எனக் கூறினார்.

காதர்முகைதீன் செய்தியாளர்கள் சந்திப்பு

இதனிடையே திமுக பொருளாளர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றபட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பணம் பறிமுதல் என்பது அனைத்து கட்சியிலும் நடைபெறுகிறது. ஆனால் திமுக கட்சியை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்திக் காட்டுகின்றன எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details