தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கோவில்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றியை உறுதி செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.
இந்தியா வளர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்- ஜி.கே வாசன் - gk vasan
தூத்துக்குடி: உலக நாடுகளை தாண்டி இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
![இந்தியா வளர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்- ஜி.கே வாசன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2901776-1098-9837ebf4-ec7e-44a8-a8ee-b9c10076c401.jpg)
உலக நாடுகளை தாண்டி இந்தியா வளர்ந்த நாடாக சிறந்து விளங்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தலைமையிலானஆட்சி மீண்டும் அமைய வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தடம் புரளாமல் ஆட்சி செய்து வருகிறார்கள் .
தமிழிசை இரும்பு பெண்மணி. தனது இயக்கத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தமிழிசை மத்திய அரசுமூலமாக பல திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்"இவ்வாறு அவர் கூறினார்.