தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் சம்பத் ராமதாஸ் தொகுதிக்குட்பட்ட மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதையடுத்து அவர் பேசுகையில், மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டால் நமக்கு இலவசங்கள் தேவை இல்லை.
மநீம வேட்பாளர் மீனவர்களிடம் வாக்குசேகரிப்பு - mnm party
தஞ்சாவூர்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சம்பத் ராமதாஸ் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
மநீம வேட்பாளர்
ஆட்சியாளர்கள் இலவசமாக கொடுக்கும் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளமுடியும். எனவே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் செய்யும். நாட்டில் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க மக்கள் நீதி மய்யம் மட்டுமே உறுதியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.