பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் வைத்தியநாதன், திருவள்ளுர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பரப்புரை மேற்கொண்டார்.
திமுக ஆட்சியில்தான் நில அபகரிப்பு, லஞ்சம், ஊழல் அதிகரித்தது அப்போது ஓ.பி.எஸ் கூறுகையில், அதிமுக மெகா கூட்டணி வேட்பாளர்களான வைத்தியநாதன், வேணுகோபால் ஆகியோர் வெற்றி வேட்பாளர்கள். சட்டமன்ற, மக்களவைத் தேர்தல் இரண்டிலும் மக்கள்தான் எஜமானர்களாகவும், நீதிபதியாகவும் செயல்படுகிறார்கள். யாருடைய ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் அதிகமாக செயல்பட்டது என்று மக்கள்தான் தீர்மானம் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 20 கிலோ இலவச அரிசி கொடுத்து உணவு பாதுகாப்பை உருவாக்கினார். பெண்களுக்கு பேறுகால நிதி உதவி ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் அரசணையாக பெறவில்லை. ஜெயலலிதா நீண்ட சட்டபோராட்டம் நடத்திதான் அரசாணையாக வெளியிட்டார்.
ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. மக்களவைத் தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறும் அவருக்கு நான் சொல்லி கொள்வது எம்.ஜி.ஆர் உருவாக்கிய தொண்டர்கள் இயக்கமான அதிமுகமவை சுனாமி, புயல், பூகம்பமே வந்தாலும் அசைக்க முடியாது. செயல்படுத்த முடியாத சேது சமுத்திர திட்டத்திற்காக 40 ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில்தான் நில அபகரிப்பு, லஞ்சம், ஊழல் அதிகரித்து என்றார்.