இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் கதிரவன்கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 912 பகுதிகளில் 2,713 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல்...! - Erode collector
ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் கதிரவன்
இன்று மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஐந்து துணை ராணுவப்படை கம்பெனிகள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட இரண்டு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' கூறினார்.