தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சண்முகையா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தொகுதிக்குட்பட்ட வல்லநாடு, தெய்வசெயல்புரம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியை நீங்கள் வெற்றி பெற செய்து இருப்பீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். அதேபோல் அடுத்துவரும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவையும் நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் பரப்புரை - election campiagn
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் பரப்புரை மேற்கொண்டார்.
திருநாவுகரசர் பரப்புரை
மோடி இந்திய நாட்டிற்கு பிரதமர் என்று சொல்வதை விட வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தான் பிரதமராக இருந்து பல நாடுகளை சுற்றி சுகம் கண்டாரே தவிர இந்தியாவிற்குள் உள்ள பல மாநிலங்களுக்கு அவர் வரவே இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் புயல், வெள்ளம் தாக்கி வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்த போது அவர் கண்டுகொள்ளவே இல்லை.