திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (101). விவசாய கூலி தொழிலாளியான இவர் தற்போது மகனின் பராமரிப்பில் உள்ளார்.
மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்ட மூத்த வாக்காளர் - 102 old man
திருவண்ணாமலை : திருப்பத்தூர் அருகே மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் 101 வயதுடைய மூத்த வாக்களரை மேளதாளத்துடன் வாக்களிக்க அழைத்துச் சென்றது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த வேட்பாளர் பெரியசாமி
101வயதை கடந்ததால் தொகுதியின் மூத்த வாக்காளர் என்பதையறிந்த மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் பிரியங்கா, பெரியசாமி வீட்டிற்கு நேரில் சென்று அவரை மேளதாளத்துடன், மாலை அணிவித்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தார். மேலும் ஊர்மக்கள் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.