திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 11 லட்சம் 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ராமன் சார்பில் காட்பாடி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
'வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்'-துரைமுருகன் திட்டவட்டம்! - durai murugan son kathir anand
வேலூர்: வருமான வரித்துறையினர் தன் மகன் மீது தொடர்ந்த வழக்கை சட்டப்படி சந்தித்துக் கொள்வதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
திமுக பொருளாலர் துரைமுருகன்
இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய காவல் துறையினர், இன்று கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் நெருங்கிய நண்பர் சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தனது மகன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.