திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
திராவிட கழகத்தினர் இந்து கடவுள்களை பற்றி பேசியது தவறு- டிடிவி கருத்து - Thiravidar party
திருச்சி: திராவிடர் கழகத்தினர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியது தவறு என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
![திராவிட கழகத்தினர் இந்து கடவுள்களை பற்றி பேசியது தவறு- டிடிவி கருத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2911816-thumbnail-3x2-ttv.jpg)
அப்போது அவர் கூறியதாவது, "2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக பெற்ற மாபெரும் வெற்றியை போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். சுதந்திர நாட்டில் தேர்தல் பரப்புரையின்போது எதிரான கருத்துக்கள் கூறப்பட்டால், வழக்கு தொடரலாமே தவிர, கூட்டத்தில் புகுந்து தாக்குவது தவறான முன்னுதாரணமாகும்.
தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இந்த அமைதிப் பூங்காவில் தேவையில்லாத கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியினர் புகுந்து தாக்குதல் நடத்தியது சரியான செயல்பாடு கிடையாது. அவர்கள் தவறாக பேசியிருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். மேலும் திராவிடர் கழகத்தினர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியது தவறுதான்" இவ்வாறு அவர் கூறினார்.