'தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்' -ஆ ராசா பேட்டி - திமுக
2019-04-18 11:29:59
பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திமுகவின் கொள்கை பரப்புச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் திமுகவினர் வீட்டில் சோதனைநடைபெறுவது என்பது அதிமுக கூட்டணியின் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.