நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே எஞ்சியிருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டத்தில் அதிமுக - பாஜகவுக்கு எதிராக பறையாட்டம்! - தமிழச்சி தங்கபாண்டிய
சென்னை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பரப்புரை பொதுகூட்டத்தில் அதிமுக - பாஜகவுக்கு எதிராக பறையாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக சைதாப்பேட்டை குயவர் தெருவில் இன்று மாலை பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேச இருந்தார்.
இந்நிலையில், அதற்கு முன்னதாக பொதுக்கூட்ட பரப்புரை பகுதியில் ஆட்களை சேர்க்க திமுக சார்பில் பறையாட்டம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலைஞர்கள் நகைச்சுவை பாணியில், அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பறையாட்டத்தை நிகழ்த்தினர்.