தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்களார்கள் மிகுந்த ஆவலுடன் தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடமையை ஆற்றினேன்: ஒரு விரல் புரட்சி இயக்குநர்! - முருகதாஸ்
சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார்.
ஒரு விரல் புரட்சி இயக்குநர்
இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், நீங்கள் அனைவரும் உங்களது வாக்கினை செலுத்த வேண்டும் என்றும், ‘ஒரு விரல் புரட்சி’ என்ற சர்கார் பட வசனத்தையும் பதவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஒரு விரல் புரட்சி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.