தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

பூமாலை மீண்டும் குரங்கின் கையில் கிடைக்கக் கூடாது - முத்தரசன் - press meet at puducherry

புதுசேரி: பூமாலை குரங்கின் கையில் கிடைத்தால் என்ன நேருமோ என்று தெரியாது அதனால் அது மீண்டும் மோடியின் கையில் கிடைக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்

By

Published : Apr 13, 2019, 1:53 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்தும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று தட்டாஞ்சாவடியில் பரப்புரை செய்தார். அப்போது, புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார் அதனால் கிரண் பேடியை தூக்கி எறிய மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். எனவே கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், குரங்கின் கையில் பூமாலை கிடைத்தால் என்ன நேரும் என்று தெரியாது ஆனால் அது மீண்டும் மோடியின் கையில் கிடைக்கக் கூடாது என்றார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், வருமானவரித்துறை காப்பாற்றப்பட வேண்டும் அதற்கு மத்தியில் மோடி அரசு நீக்கப்பட வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details