தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

அமமுக தொண்டர்கள் - நிர்வாகிகள் இடையே மோதல்! - Amateur Volunteers

திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதிக்கு அமமுக வேட்பாளர் வராததால் விரக்தியடைந்த அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமமுக தொணடர்கள் மோதல்

By

Published : Apr 6, 2019, 11:46 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பஸ் நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் வாக்குசேகரித்துக் கொண்டிருந்தார்.

இதைதொடர்ந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள புதுப்பட்டி, குட்டுப்பட்டி, கோசுகுறிச்சி, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க சென்றபோது, பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாக்கு சேகரிக்க வேட்பாளர் வரவேண்டும் என தொண்டர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு வேட்பாளரை நிர்வாகிகள் அந்த பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details