தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2019, 8:31 PM IST

ETV Bharat / elections

சென்னை, கோவையில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு

சென்னை: தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குமையத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் ஆர்வமுடன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

தபால் ஓட்டு பதிவு

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக வருகின்ற 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்யலாம். அதன்படி இன்று சென்னை மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே. திருமலாச்சாரியார் தேசிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வடசென்னை மற்றும் தென்சென்னை தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பணி அலுவலர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல் கோவையில் உள்ள நிர்மலா கல்லூரியில், அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1500 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details