நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் இன்று சரத்குமாரை அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
‘எங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்த சரத்குமாருக்கு நன்றி’ - இல.கணேசன் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நன்றி தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்
அதோடு, பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 5 தொகுதியிலும் தாமரைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளும்படி அவரிடம் இல.கணேசன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.