தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

விஜய்யை ஏமாற்றியது போல் ஷோபனாவையும் ஏமாற்றிய அரசு! - அப்போலோ மருத்துமனை

சர்கார் படத்தில் விஜய்-க்கு நேர்ந்தது போல் ஆந்திர மாநிலத் தேர்தலில் அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ஷோபனா காமினேனிக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷோபனா காமினேனி

By

Published : Apr 11, 2019, 11:39 PM IST

வெளிநாட்டில் வசிக்கும் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகளும், துணைத் தலைவருமான ஷோபனா காமினேனி, ஆந்திர மாநிலத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து ஹைதரபாத் வந்துள்ளார்.

பின்னர், வாக்களிப்பதற்காக அவரது பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட இங்கு வந்தேன். ஆனால் வாக்கு நீக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிரிமினல் குற்றம். நான் ஏற்கனவே நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டுள்ளேன். ஒரு குடிமகனாக நான் ஏமாற்றப்பட்டுளேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், விஜய்க்கும் இதேபோல் தான் நேர்ந்திருக்கும். அக்காட்சியை இந்த சம்பவம் நினைவு கூர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details