திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானான சசி தரூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மும்மொழி கொள்கையை தடை செய்வது சரியான தீர்வு அல்ல. ஆனால் அதனை சரியாக அமல்படுத்த வேண்டும். மும்மொழி கொள்கை 1960களில் அறிமுகமானாலும் அதனை சரியாக செயல்படுத்தவில்லை. தென்னிந்தியாவில் இந்தியை இரண்டாவது மொழியாக கற்கின்றனர். ஆனால் வடஇந்தியாவில் தென்னிந்திய மொழிகளை கற்க மறுக்கிறார்கள்" என்றார்.
மும்மொழி கொள்கைக்கு தீர்வு சொல்லும் சசி தரூர்!
திருவனந்தபுரம்: "மும்மொழி கொள்கையில் உள்ள பிரச்னையை தீர்ப்பது என்பது அதனை அமல்படுத்துவதில்தான் உள்ளது" என்று, சசி தரூர் எம்பி தெரிவித்துள்ளார்.
shashi tharoor
மேலும் பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கை வரைவு 2019படி இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், இந்தியை தவிர தாய் மொழி ஒன்றை கற்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலத்தை தவிர வேறு இந்திய மொழியை கற்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.