மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் லோஹார்டாகாவில் பாஜக சார்பாக பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சித்தார்.
ராகுல் பகல் கனவு காண்கிறார் - மோடி விமர்சனம் - rahul is daydreaming to become PM, says modi
ராஞ்சி: பிரதமராகும் ஆசையில் இருக்கும் ராகுல் காந்தி பகல் கனவு காண்கிறார் என மோடி ஜார்கண்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், "ஒரு நாளைக்கு பத்து முறை கண்ணாடியை பார்த்து பிரதமராக ஆசைப்படுபவர்கள் அவர்களின் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில்கூட வெற்றிபெற இயலவில்லை. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிவிட்டு அதற்கு சாக்கு சொல்லும் குழந்தைகள்போல் எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளின் போக்கை அறிந்துகொண்டு தேர்தல் இயந்திரங்கள் மேல் குறை சொல்கின்றனர். பிரதமராக வேண்டும் என ராகுல் பகல் கனவு காண்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில்தான் நக்சலைட்டுகள் துணிந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் எங்களின் ஆட்சியில் இடதுசாரி பயங்கரவாதத்தை முழுவதுமாக ஒழித்தோம். அதனை நம்பிய இளைஞர்களும் வன்முறையை கைவிட்டு சமூகத்தில் கலந்துள்ளார்கள். பயங்கரவாதத்தையும், நக்சலிசத்தையும் ஒழிக்க பெரும்பான்மையான அரசு அமைய வேண்டும்" என்றார்