நாடு முழுவதும் மக்களவைத் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்காக தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை! - coimbatore
சென்னை: மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.
PM modi to visit coimbatore
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாலை ஆறு மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அதனைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடீசியா மைதானத்தில் இன்று இரவு 07:30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.