தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் நேற்று டெல்லியில் உள்ள அசோகா விடுதியில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் அதிமுக, சிவ சேனா, ஐக்கிய ஜனதா தளம் உட்பட 36 கட்சிகள் கலந்து கொண்டன. முன்னதாக சிவ சேனா கலந்து கொள்ளாது என தெரிவித்த நிலையிலும் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே விருந்தில் கலந்து கொண்டார்.
நாட்டின் லட்சியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேஜகூ - மோடி
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் எதிர்பார்ப்புகளையும், லட்சியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் உள்பட பல தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பேசிய மோடி, பிராந்தியங்கள் எதிர்பார்க்கும் தேவைகளை நிறைவேற்றுவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய பங்கினை ஆற்றியுள்ளது என பெருமை கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் எதிர்பார்ப்பையும், லட்சியங்களையும் பிரிதிநிதித்துவப்படுவதாக தெரிவித்த அவர், நாட்டின் மிகப் பெரிய சாதி ஏழை மக்கள் என்றும் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டியது அரசின் கடமை எனக் கூறினார். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும் சரி செய்து வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்போம் எனவும் மோடி சூளுரைத்தார்.