தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

மோடி உண்மையான தலைவர் அல்ல - மாயாவதி - உண்மையான

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் மைன்பூரியில் நடந்த பொதுகூட்டத்தில் பிற்படுத்தப்பட்டொருக்கான உண்மையான தலைவர் முலாயம்தான், மோடி அல்ல என மாயாவதி கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்டொருக்கான உண்மையான தலைவர் மோடி அல்ல - மாயாவதி

By

Published : Apr 19, 2019, 5:37 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பாக மைன்பூரியில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளுக்கு பிறகு, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, முலாயம் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இதில் முலாயமுக்கு ஆதரவாக பேசிய மாயாவதி மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டின் உண்மையான பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான தலைவர் முலாயம், மோடி பொய்யாக கட்டமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர். கட்சியில் அனைத்து சமூதாய மக்களையும் முலாயம் சேர்த்துகொண்டார்"

"சில நேரம் பொதுநலன்கள், கட்சிநலன்களுக்காக உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து மக்களவையில் போட்டியிடுவது நாட்டின் நிலைமையை மாற்றத்தான்" என்றார். மேலும், மைன்பூரி தொகுதியில் இருந்து போட்டியிடும் முலாயமுக்கு வாக்களிக்கும்படி மாயாவதி கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details