உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியா-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையே இருக்கும் வழிப்பாதையை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் தவறாக பயன்படுத்துகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் நிறுத்திவைப்பு
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்தியா-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இந்த வழித்தடத்தில் ஆயுதங்கள், கறுப்புப் பணம், போதை வஸ்து ஆகியவற்றை சட்டவிரோதமாக கடத்த பயன்படுத்துகிறது. குறிப்பாக காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளைச் சேரந்தவர்கள் இங்கு அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியானதால் வர்த்தகம் துண்டிக்கப்படுகிறது.
வர்த்தகத் துண்டிப்பை கண்காணிக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும், வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.