கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அம்மாநில முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான எச்.டி. குமாரசாமி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, "மோடி என்னை தேசப்பற்று இல்லாதவன் எனக் குற்றம் சாட்டுகிறார். அதனை அவரிடம் இருந்து கற்க வேண்டிய அவசியம் எனக்குஇல்லை"
தேசப்பற்றை மோடியிடம் கற்கவேண்டிய அவசியம் இல்லை - குமாரசாமி - இல்லை
பெங்களூரு: மோடி என்னை தேசப்பற்று இல்லாதவன் எனக் கூறுவதால், அவரிடம் இருந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை என எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.
எச்.டி. குமாரசாமி
"தேவ கவுடா பிரதமராக இருந்தபோது காஷ்மீரில் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. இதுதான் எங்கள் பாரம்பரியம். எனவே எங்களிடம் கேள்வி எழுப்பும் உரிமை அவர்களுக்கு இல்லை.
28 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.