மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங்கும், பாஜக சார்பாக மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது பிணையில் வெளியே உள்ள சாத்வி பிரக்யா தாக்கூரும் போட்டியிட உள்ளனர். இதனால் இத்தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திக் விஜய சிங்குக்கு ஆதரவாக கனையா குமார் பரப்புரை! - திக் விஜய சிங்
போபால்: காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய சிங்குக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெகுசராய் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனையா குமார் பரப்புரை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திக் விஜய் சிங்குக்கு ஆதரவாக பிகார் மாநிலம் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கனையா குமார் பரப்புரை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து திக் விஜய சிங் கூறுகையில், "நான் கனையா குமாரின் தீவிர ரசிகன். அவர் நல்ல கொள்கையை உடையவர். ராஷ்டிரிய ஜனதா தளம் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது தவறு. பெகுசராய் மக்களவைத் தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓதுக்கி இருக்க வேண்டும் என நான் என் கட்சி மேலிடத்தில் கூறினேன். இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணியை முறித்ததுதான் 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு காரணம்" என்றார்.