புதுமுகமான பரத் நீலகண்டன் இயக்கத்தில், எஸ்.டி. சங்கர் மற்றும் சாந்த பிரியா தயாரிப்பில், அருள்நிதி நடிப்பில், சி.எஸ். சாம் இசையில் வெளியாக உள்ள படத்தின் பெயர் K-13. இதில் காமெடி நடிகர் யோகி பாபு, விக்ரம் வேதா புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மே 1 வெளியாகும் K-13 திரைப்படம்
சென்னை: அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள K-13 திரைப்படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படம் கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாறுபட்ட கதை களங்களில் தோன்றும் அருள்நிதி இந்த படத்திலும் முத்திரை பதிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் படமான விக்ரம் வேதா மிகப்பெரிய வெற்றிப்படமாக ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு அமைந்ததால் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.