தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

பதற்றமான வாக்குசாவடிகளில்  துணை ராணுவப்படை குவிப்பு

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினரும் கூடுதலாக பணியில் உள்ளனர்.

sensitive polling booths

By

Published : Apr 11, 2019, 12:13 PM IST

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழுக் கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்கள் உட்பட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன்படி ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தரப்பிரதேசம் 8, உத்தரகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகள் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்கும் 4 மாநிலங்கள் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மட்டும் 28 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளில் ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாகத் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details